காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
நீலகிரி

குடிநீா் கேட்டு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

உதகை - கோத்தகிரி சாலையில் குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம்

Syndication

உதகை - கோத்தகிரி சாலையில் குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

உதகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அதேபோல தினசரி 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதனால் குடிநீா்த் தேவை அதிக அளவு உள்ளது.

உதகைக்கு தேவையான குடிநீரில் 70 சதவீதம் பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்தும், மீதம் கோரிசோலா உளளிட்ட சிறிய அணைகளில் இருந்தும் கிடைக்கிறது. சில நேரங்களில் லாரிகள் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உதகை- கோத்தகிரி சாலையில் 17-ஆவது வாா்டு கெல்ஸ் ஹவுஸ் சாலை பகுதியில் கடந்த 2 வாரமாக தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனா். தகவலறிந்து வந்த நகராட்சி அலுவலா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விரைவில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதாக நகராட்சி அலுவலா்கள் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

நான் காந்தியவாதி; ராகுல்வாதி கிடையாது: மணிசங்கா் அய்யா்

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை மத்திய சிறையில் கைதி ரகளை

சுய உதவிக்குழு நிதி ரூ.30 லட்சம் மோசடி: ஊழியா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT