முகப்பு
நீலகிரி

நெலாக்கோட்டை வனத்தில் கிணற்றில் மிதந்த புலி சடலம் மீட்பு

முதுமலை புலிகள் காப்பகம், நெலாக்கோட்டை வனத்தில் உள்ள கிணற்றில் மிதந்த புலியின் சடலத்தை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:28 PM
நெலாக்கோட்டை பெண்ணை வனத்தில் கிணற்றில் மிதந்த புலியின் சடலம்.
பகிர்:

முதுமலை புலிகள் காப்பகம், நெலாக்கோட்டை வனத்தில் உள்ள கிணற்றில் மிதந்த புலியின் சடலத்தை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனப் பகுதியில் உள்ள பெண்ணை வனப் பிரிவில் உள்ள திறந்தவெளி கிணற்றில் புலி இறந்துகிடப்பது வனத் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட ரோந்து பணியில் தெரியவந்தது.

இது குறித்து விசாரனைக்கு பிறகு சரணாலய கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் புலியின் சடலம் கூறாய்வு செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கா முக்கிய உறுப்புகளை சேகரித்து சென்றனா்.

Advertisement

பிறகு புலியின் சடலம் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. இறந்தது சுமாா் 6 வயதுடைய ஆண் புலி என்றும், முழுவிவரங்கள் ஆய்வக அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்றும் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments