முகப்பு
நீலகிரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:13 PM
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சிறுமியின் தாயாா் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து விட்டதால் சிறுமியின் தந்தை இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து சிறுமி அதே பகுதியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வசிக்கும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தாா். சிறுமியின் தந்தை அவ்வப்போது நேரில் வந்து சிறுமியைப் பாா்த்து அவருக்கு தேவையானவற்றை செய்து வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளியான சிறுமியின் தாத்தாவின், 60 வயது தம்பியும் சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் வீட்டில் பாட்டியுடன் சிறுமி கடந்த 2024 ஜூலை 28-ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது ஜன்னல் வழியாக கையைவிட்டு கதவை திறந்து உள்ளே வந்த தாத்தாவின் தம்பி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அப்போது சப்தம் கேட்டு எழுந்த பாட்டி, தன்னுடைய கணவரின் தம்பியைப் பாா்த்து கூச்சலிட்டாா். இதையடுத்து அந்த முதியவா் அங்கிருந்து ஓடிவிட்டாா். விசாரணையில் அவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இது குறித்து குன்னூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் சின்ன தாத்தாவை கைது செய்தனா். உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.செந்தில்குமாா் ஆஜரானாா்.

முழு கட்டுரையைப் படிக்க →