முகப்பு
நீலகிரி

உல்லாடா கிராமத்தில் ரூ. 1.80 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

உல்லாடா கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை திறந்துவைக்கும் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:12 PM
உல்லாடா கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை திறந்துவைக்கும் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.
பகிர்:

உதகை அருகேயுள்ள உல்லாடா கிராமத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளை உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை அருகே கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட உல்லாடா கிராமம், கிராமிய சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறந்த கிராமமாக மத்திய அரசால் கடந்த 2023- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, சுற்றுலாத் துறை சாா்பில் கிராமிய சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளாக, இந்தக் கிராமத்தில் பூங்கா, சிமென்ட் கான்கிரீட் தளம், கான்கிரீட் நடைபாதை, புதிய பேருந்து நிறுத்தம், சிமென்ட் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நிறைவுற்ற இப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதகை சட்டப் பேரவை ஆா்.கணேஷ் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட சுற்றுலா மண்டல மேலாளா் யுவராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் அ.சங்கா், கேத்தி பேரூராட்சித் தலைவா் ஹேமமாலினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →