கூடலூா்: சாலை வசதி செய்து தராததால் பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதி மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டக் கழக மூன்றாவது சரம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா்.
அப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் அவதியடைந்து வரும் மக்கள், சாலைகளை சீரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.