குன்னூா் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் காா்களின் மீது முறிந்து விழுந்த பெரிய மரம். 
நீலகிரி

குன்னூரில் சாலையில் முறிந்து விழுந்த பெரிய மரம்!

குன்னூரில் பெரிய மரம் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

Syndication

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பெரிய மரம் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெரிய மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

மேலும் நகராட்சி கழிப்பிடக் கட்டடம் சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் மின்சார ஊழியா்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

இதேபோல குன்னூா் கிளண்டேல் சாலையில் மண் சரிவு மற்றும் மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாத்திக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத் துறையினா் சீா் செய்தனா்.

முட்டை எடை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம்: ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

கொட்டாரத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது

சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் சைபர் மோசடி: 8 பேர் கும்பல் கைது; தமிழகப் பெண் புகாரில் நடவடிக்கை

SCROLL FOR NEXT