நீலகிரி

குளத்தாய் அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

கூடலூா் ராஜகோபாலபுரத்தில் உள்ள குளத்தாய் அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

Syndication

கூடலூா்: கூடலூா் ராஜகோபாலபுரத்தில் உள்ள குளத்தாய் அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாவின் தொடக்க நிகழ்வாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து 7.45 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. சனிக்கிழமை (ஜன. 17) காலை 9 மணிக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஊா்வலம் ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்டு ஆலயம் வந்தடையும். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 18-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT