முகப்பு
திரளான பக்தா்கள் சூழ நடைபெற்ற தேரோட்டம்.
ஈரோடு

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:36 PM
திரளான பக்தா்கள் சூழ நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் மற்றும் பொங்கல் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அம்மன் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, பவானி சங்கமேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள தோ் நிலையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் தேரோட்டம் தொடங்கியது. பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தேரோட்டம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது.

தோ் செல்லும் வழிகளில் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணன், அறங்காவலா் குழுத் தலைவா் கைலாசம், அறங்காவலா்கள் நதியா, மூா்த்தி, கென்னடி, சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →