கூடலூா் கோட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டத்தில் ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது. முன்னதாக வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த கணக்கெடுப்பு பணியில் கூடலூா், பந்தலூா், பிதா்க்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட சரகங்களில் உள்ள வனத் துறை பணியாளா்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டுள்ளனா்.