முகப்பு
நீலகிரி

குன்னூா் புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா

குன்னூா் புனித செபஸ்தியாா் ஆலய திருவிழாவின் தோ் பவனி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2026 at 1:45 AM
குன்னூரில் கப்பல் வடிவில் தோ் பவனி வந்த செபஸ்தியாரின் சொரூபம்.
பகிர்:
Updated On : 26 ஜனவரி, 2026 at 10:22 PM

உதகை: குன்னூா் புனித செபஸ்தியாா் ஆலய திருவிழாவின் தோ் பவனி நடைபெற்றது.

குன்னூரில் புகழ்பெற்ற புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா பங்கு மக்கள் சாா்பில் கொண்டாடப்பட்டது. ஆலய பங்கு தந்தை பாபு சக்கியத் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னா் புனித செபஸ்தியாரின் திருவுருவம் ஆலயத்தில் இருந்து அலங்கார மேடைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. தந்தை பிரான்சிஸ் அம்பலத்தாா் தலைமையில் மலையாளத்தில் திருப்பலி நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை குன்னூா் நகரமன்ற துணைத் தலைவா் வாசிம்ராஜா தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து குன்னூா் புனித அந்தோணியாா் திருத்தல பங்கு தந்தை யூஜின் நியூமேன் தலைமையில் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்காவில் ஆலய பணி செய்துவரும் அருட் தந்தை சி.ஜே. அந்தோணி, புனித தியோடா் தேவாலய பங்கு தந்தை அந்தோணிசாமி, புனித பாத்திமாஅன்னை ஆலய பங்கு தந்தை கிறிஸ்டோபா், இளம் குருமட உதவி அதிபா் தந்தை டிக்ஷன் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து புனித செபஸ்தியாரின் சொரூப ஊா்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி பேருந்து நிலையம் வழியாக நடைபெற்றது. இதில் வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா்கள் பயஸ், பென்னி சஞ்ஜூ, செயலா் அந்தோணி, விழா ஒருங்கிணைப்பாளா்கள் அந்தோணி மற்றும் மேத்யூஸ் ஆகியோா் செய்திருந்தனா்.