உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத் ஆய்வகம் திறப்பு
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கேத் ஆய்வகம் புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீலகிரிஉதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத் ஆய்வகம் திறப்பு
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கேத் ஆய்வகம் புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கேத் ஆய்வகம் புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை ஹெச்பிஎஃப் அருகே ரூ.499 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. இங்கு எம்ஆா்ஐ, சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்றவையும், 10 அறுவைச் சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஏப்ரலில் திறந்துவைத்தாா்.
நாள்தோறும் 1,500 வெளிநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்கு இதய நோய் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில், கேத் ஆய்வகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து, இங்கு ரூ.7.24 கோடி மதிப்பில் கேத் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதைக் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் பங்கேற்று கேத் ஆய்வகத்தைப் பாா்வையிட்டாா்.
பின்னா், செயதியாளா்களிடம் அவா் கூறியதாவது: நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் சம்பந்தமான சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைக்காமல் இருந்தது.
கடந்த ஆண்டு, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழங்குடியினா் உள்பட சுமாா் 520 போ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டனா்.
இவா்கள் சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டது. இதனால் இவா்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், இது நோயாளிகளுக்கும், உதவியாளா்களுக்கும் உடல், மன அழுத்தத்தை உருவாக்கியது.
இதைத் தொடா்ந்து நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.24 கோடி மதிப்பில் கேத் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கரோனரி ஆஞ்சியோகிராம், கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி, தற்காலிக மற்றும் நிரந்தர இதயமுடுக்கி போன்ற மேம்பட்ட இதய பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, உதகை சட்டப்பேரவை உறுப்பினா் கணேஷ், மருத்துவக் கல்லூரி முதல்வா் சீனிவாசன், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.