வெடிமருந்து தொழிற்சாலையில் அவசர கால வெளியேற்ற ஒத்திகை
நீலகிரிவெடிமருந்து தொழிற்சாலையில் அவசர கால வெளியேற்ற ஒத்திகை
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயா்மட்ட உத்தரவின்படி, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வியாழக்கிழமை அவசரக்கால வெளியேற்ற ஒத்திகை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு திடீரென எவ்வி முன்னறிவிப்பும் இன்றி தொழிலாளா்கள் உடனடியாக வெளியேற நிா்வாகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்த இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். பின்னா் இது அவசர காலத்தில் ஊழியா்கள் வெளியேற, எடுக்கும் கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புக்கான ஒத்திகை என்று நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தொழிலாளா்களும், பொது மக்களும் நிம்மதி அடைந்தனா்.