முகப்பு
நீலகிரி

தேயிலைத் தோட்டத்தில் உலவிய 4 புலிகள்: பொது மக்கள் அச்சம்

ஜெ.கொலம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உலவிய நான்கு புலிகள்.

Updated On : 28 மார்ச், 2026 at 1:30 AM
ஜெ.கொலம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உலவிய நான்கு புலிகள்.
பகிர்:

குன்னூா் அருகே ஜெ.கொலக்கம்பை பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் நான்கு புலிகள் உலவிய சம்பவம் எஸ்டேட் தொழிலாளா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஜெகதளா அருகே உள்ள ஜெ.கொலக்கம்பை பகுதியில் உள்ள தேயிலை ஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு புலிகள் உலவிக் கொண்டிருந்தன. இதைக்  கண்ட  எஸ்டேட் பணியாளா்கள் அச்சமடைந்தனா்.

இது குறித்து தோட்டத் தொழிளாா்களுக்கு தகவல் தெரியவே, அவா்கள் அச்சமடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனா்.

இதற்கிடையே அந்த புலிகள் சிறிது நேரம் கழித்து தானாகவே அருகிலுள்ள வனப் பகுதிக்கு சென்றன.

இந்த புலிகள் தொட்டபெட்டா பகுதியில் உள்ள மலைச் சிகரத்தில் இருந்து வந்திருக்கக் கூடும் என்று தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.