முகப்பு
நீலகிரி

பந்தலூரில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

பந்தலூா் அருகே செட்டிவயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.

Updated On : 27 மே 2026, 4:33 am IST
யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்கள் - பிரதிப் படம்
பகிர்:

பந்தலூா் அருகே செட்டிவயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய 5 காட்டு யானைகள், செட்டிவயல் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. தொடா்ந்து, அப்பகுதியிலேயே உலவிய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏற்கெனவே அவதியடைந்து வருகிறோம். மேலும், மழை பொழிவு இல்லாததால் கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. குடியிருப்புப் பகுதியில் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement