திருப்பூர்

பயிர்களைச் சேதப்படுத்தும் மயில்கள்: விவசாயிகள் பாதிப்பு

DIN

தாராபுரம் அருகே, நடவு செய்த பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தாராபுரம் பகுதியில் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் பழைய அமராவதி பாசனப் பகுதிகளான அலங்கியம், சீத்தக்காடு பகுதிகளில் மக்காச்சோளம், கம்பு, சோளம், தட்டைப்பயிர் உள்ளிட்டவைகள் பயிர் செய்யப்பட்டுள்ளன.
அலங்கியத்தை ஒட்டியுள்ள சண்முக நதி அருகே அடர்ந்த காடுகளில் உள்ள மயில்கள் தற்போது இப்பகுதிகளில் முகாமிட்டு விளை பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
விவசாயிகள் மயில்களைத் துரத்தும்போது அவை பறந்து அருகில் உள்ள மரங்களில் தஞ்சம் புகுந்துவிடுகின்றன.
விவசாயிகள் சென்ற பின்னர், மீண்டும் அவை பயிர்களைச் சேதப்படுத்துகின்றன.
எனவே, வனத் துறையினர் இந்த மயில்களைப் பிடித்து சண்முக நதி வனப் பகுதியில் விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து, வனத் துறையினரிடம் மனுவும் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT