திருப்பூர்

பல்லடம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

DIN

பல்லடம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழக அரசின் நிதித் துறைச் செயலர் பி.செந்தில்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
பல்லடம், ராயர்பாளையத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் குறுகிய காலத்தில் மண் இன்றி தண்ணீரில் மட்டுமே வளர்க்கப்படும் கால்நடைத் தீவனமான அசோலா தீவனம் வளர்ப்புப் பணி, பணிக்கம்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குட்டையைத் தூர்வாரும் பணி, மண் புழு, இயற்கை உரம் தயாரித்தல், குறைந்த தண்ணீரில் புதிய தொழில்நுட்பத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் முறை, செம்மிபாளையத்தில் அத்தப்பன் என்பவரது தோட்டக் குளத்தில் ரூ. 1.43 லட்சத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகியவற்றை தமிழக அரசின் நிதித் துறைச் செயலரும் (செலவினம்), திருப்பூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான பி.செந்தில்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் (பொறுப்பு) மைக்கேல், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT