திருப்பூர்

வாகனப் பதிவுச் சான்று வழங்காததை கண்டித்து இளைஞர் போராட்டம்

DIN

அவிநாசியில் தவணைமுறையில் வாங்கிய இருசக்கர வாகனத்துக்கான முழுப் பணத்தைச் செலுத்திய பிறகும் வாகனப் பதிவுச் சான்று வழங்கப்படாததைக் கண்டித்து இளைஞர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவிநாசி- திருப்பூர் சாலை, கைகாட்டி பிரிவில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அவிநாசி அருகே உள்ள கருவலூர் பகுதியைச் சேர்ந்த அருண் (28) என்பவர் இருசக்கர வாகனத்தை தவணைமுறையில் 2015-இல் வாங்கியுள்ளார்.இதற்கு முன்பணமாக ரூ. 10 ஆயிரம் செலுத்தியுள்ளார். நிதி நிறுவனம் மூலம் 24 மாதங்கள் செலுத்த வேண்டிய தொகையை 19 மாதம் தலா ரூ. 1, 625 செலுத்தியுள்ளார். மேலும், கடந்த 5 மாதங்களாக வண்டிக்கான தொகையைச் செலுத்தவில்லையாம். இதையடுத்து, அத்தொகைக்கான அபராதம் ரூ. 6 ஆயிரம் சேர்த்து ரூ. 14 ஆயிரம் அண்மையில் செலுத்தியுள்ளார். பின்னர், அந்நிறுவனத்திடம் இருசக்கர வாகனத்தின் வாகனப் பதிவுச் சான்று இதுவரை வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்தும், தனது வாகனப் பதிவுச் சான்றை வழங்கக் கோரியும் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் முன்பு அருண் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு வந்த அவிநாசி காவல் உதவி ஆய்வாளர் காமராஜ் அந்நிறுவனத்திடமும், அருணிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், வாகனப் பதிவுச் சான்றை சனிக்கிழமை மாலைக்குள் தருவதாக இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தார் உறுதியளித்தனர். இதையடுத்து, அருண் போராட்டத்தைக் கைவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT