திருப்பூர்

ஹிந்தி தேர்வு: 1,200 பேர் எழுதினர்

DIN

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வை 1, 200 பேர் எழுதினர்.
ஹிந்தி ப்ரேமி மண்டல் என்ற அமைப்பு சார்பில் பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்தரார்த், ப்ரவீண் பூர்வார்த், ப்ரவீண் உத்தரார்த் ஆகிய பாடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை 10 வயது முதல் 60 வயதுள்ளவர்கள் 1, 200 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வை திருப்பூர் ஹிந்தி ப்ரேமி மண்டலத் தலைவர் கே.எஸ்.கோபால், செயலாளர் வி.கோவிந்தராஜு, பொருளாளர் எல்.சம்பத்குமார், இணைச் செயலாளர் பி.தனசேகர் ஆகியோர் கண்காணித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜெயந்தி மெட்ரிக். பள்ளித் தாளாளர் கே.கிருஷ்ணன், பள்ளி முதல்வர் சுரேஷ்நாதன் ஆகியோர் செய்திருந்தனர். இப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையும் ஹிந்தி தேர்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT