திருப்பூர்

மாநகர போலீஸார் சார்பில் மாரத்தான் போட்டி

DIN

திருப்பூரில் மாநகர காவல் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, போலீஸார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி,  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் கல்லூரி  சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாரத்தான் போட்டி தொடங்கியது.  கல்லூரி மைதானத்தில் தொடங்கிய ஓட்டம், வஞ்சிபாளையம் சாலை வழியாக  6 கி.மீ. தொலைவில் நிறைவு பெற்றது. இதில், போலீஸார், பொதுமக்கள்  நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆடவர், மகளிருக்கென தனித்தனிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக இரு பிரிவுகளிலும் போட்டியை காவல் ஆணையர் நாகராஜன் தொடங்கி வைத்தார். தனித்தனியாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு, வரும் 22-ஆம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT