திருப்பூர்

கால்நடை பாதுகாப்புத் திட்டத்தில் நடப்பு ஆண்டில் 182 முகாம்கள் நடத்த இலக்கு

DIN

கால்நடைப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் 182 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களின் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ வசதி அளிப்பதற்காக கால்நடைப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடை மருந்தகங்களில் இருந்து தொலைதூரத்தில் உள்ள, கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், கால்நடைகளுக்கு அந்தந்த கிராமங்களிலேயே மருத்துவ வசதி மேற்கொள்ள கால்நடைப் பாதுகாப்புத் திட்டம் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலமாக கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 2017-18-ஆம் ஆண்டில் 182 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பங்குபெறும் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், தடுப்பூசி, சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கைமுறைக் கருவூட்டல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT