முகப்பு
திருப்பூர்

இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்?.

திருப்பூர்

இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்?.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்?.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது. இம் மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்களாக வேலை செய்யும் அனைவருக்கும் இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,  நிலுவைத் தொகையே உடனடியாக வழங்க வேண்டும், மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்படிருக்கும்  கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான தொகையைக் கொடுக்க வேண்டும்?, இலவச அமரர் ஊர்தி வாகனங்களை முறையாகப் பழுதுபார்த்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இப் போராட்டத்தால் அமரர் ஊர்திகள் இயக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஓட்டுநர்களுடன் ரெட்கிராஸ் கிளப் செயலர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதன்கிழமை மாலைக்குள் ஊதிய நிலுவைத் தொகை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் தமிழ்நாடு அரசு திட்ட ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில துணைச் செயலர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →