திருப்பூர்

பள்ளி வாகன ஓட்டுநரை தாக்கிய காவலர்

DIN

அவிநாசியில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை காவலர்  தாக்கியதால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி,  முத்துச்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் கணேசன்(50).  இவர் அவிநாசி அருகே நடுவச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக உள்ளார்.
இந்நிலையில் இவர் பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியரை இறக்கிவிடுவதற்காக முத்துச்செட்டிபாளையம் மாரியம்மன் கோயில் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு  சென்றுள்ளார். 
அப்போது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு பெண் ஊழியரை இறக்கிவிட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அவிநாசி காவல் நிலைய காவலர் செல்லக்கண்ணு (27),  அவரது நண்பர் குமார் ஆகியோர்,  பள்ளி வாகன ஓட்டுநர் கணேசனை தகாத வார்த்தையில்,  திட்டி தாக்கினராம்.  
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது காவலர் செல்லக்கண்ணு மது போதையில் இருந்தததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT