மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு
உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கியப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் உடுமலை வட்டத்தில் உள்ள 25- க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில், பள்ளபாளையம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி 78 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இதற்காக ஒட்டுமொத்த ரன்னர்ஸ் கோப்பையை இப்பள்ளி வென்றது. இதையொட்டி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளித் தலைவர் டாக்டர் பி.எம்.பாலசுப்பிரமணியம், செயலர் டாக்டர் கே.பாலசுந்தரம், இயக்குநர்
எம்.சுப்பிரமணியம், முதல்வர் ஜீ.ஜீவ அலெக்சாண்டர் உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.