திருப்பூர்

காரணம்பேட்டையில் மாட்டுச் சந்தை அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

பல்லடம் காரணம்பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட அளவிலான மாட்டுச் சந்தை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ஆ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
பல்லடம் காரணம்பேட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாடு இன்றிக் காணப்படுகிறது.  திருப்பூர் மாநகராட்சி எல்லையில் தென்னம்பாளையம் சந்தைப் பேட்டையில்  மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை மதியம் வரை மாட்டுச் சந்தை நடைபெறுவதால்  பல்லடம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
எனவே,  மாவட்ட அளவிலான மாட்டுச் சந்தையை காரணம்பேட்டை பேருந்து நிலைய வளாகத்துக்கு மாற்றினால் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களால் யாருக்கும் நெரிசல் ஏற்படாது. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் எளிதாக வந்து போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT