திருப்பூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு  25-இல் சிறப்பு முகாம்

DIN

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் அவிநாசியில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமிவெளியிட்டுள்ள செய்தி:
  திருப்பூர் மாவட்டத்தில், மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ( 40 சதவீத பாதிப்புக்கும் மேல்),  கண்பார்வையற்றோர் மற்றும் செவித் திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் ( 100 சதவீத பாதிப்பு)  அடையாள அட்டை பெற்றும் இதுநாள் வரை மாதாந்திர உதவித் தொகை பெறாதவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 
  அவிநாசி வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் அவிநாசி எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களின் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ,  2 புகைப்படங்கள்  ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT