பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி மதினா பேகம் (42). இவரிடம் திருப்பூர், ராஜீவ் நகரைச் சேர்ந்த எஸ்.ராஜன் (31) என்பவர் சில நாள்களுக்கு முன் ரூ. 6 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். அதை உரிய நேரத்தில் திரும்ப அளிக்காத காரணத்தால், ஏற்கெனவே ராஜன் மீது மதினா பேகம் வழக்கு தொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன் இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக மதினா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜனைக் கைது செய்தனர்.