முகப்பு
திருப்பூர்

கொள்முதல் மையத்துக்கு முருங்கைக்காய் வரத்து குறைவு

வெள்ளக்கோவில் கொள்முதல் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் வரத்து பாதியாகக் குறைந்து காணப்பட்டது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

வெள்ளக்கோவில் கொள்முதல் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் வரத்து பாதியாகக் குறைந்து காணப்பட்டது.
வெள்ளக்கோவில் கொங்கு நகரில் தனியார் கொள்முதல் மையத்தில் வாரந்தோறும் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. சராசரியாக 7 டன் அளவுக்கு வரத்து இருக்கும். தற்போது விளைச்சல் பருவம் இல்லாததால் வரத்து குறைந்துபோனது. இந்த வாரம் 2 டன் மட்டுமே வரத்து இருந்தது.
முருங்கை மரங்களில் வாடல் நோய் இருப்பதாலும், வேகமான காற்று வீசுவதால் பூக்கள் உதிர்வதாலும் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயி சரவணன் தெரிவித்தார். செடி முருங்கைக் காய் கிலோ ரூ. 30,  மர முருங்கைக்காய் ரூ. 20 என விற்பனையானது. இன்னும் சில வாரங்களுக்கு வரத்துகூட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.