முகப்பு
திருப்பூர்

பேரநாயக்கன்புதூர் அரசுப் பள்ளியில் பாலர் சபைத் தேர்தல்

பேரநாயக்கன்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்றத் தேர்தல், பாலர் சபை தேர்தல் நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:31 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பேரநாயக்கன்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்றத் தேர்தல், பாலர் சபை தேர்தல் நடைபெற்றது.
பாலர் சபைத் தேர்தலுக்கு பள்ளித் தலைமையாசிரியை ப.திலகவதி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகச் செயல்பட்டனர். இதற்காக கடந்த 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றுது.   இதில், முதல் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு வரை உள்ள மொத்தம் 167 மாணவ, மாணவிகளில் 159 பேர் வாக்களித்தனர். 
தேர்தல் முறைப்படி இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை இடப்பட்டு வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது. மாணவர்கள் துறை வாரியாக வாக்களித்து வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டை செலுத்தினர். பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன.  இதில், வெற்றி பெற்றவர்கள் மாதிரி அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.