மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தேர்வெழுதும் ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களைய வலியுறுத்தல்
பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் தேர்வெழுத ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர்மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தேர்வெழுதும் ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களைய வலியுறுத்தல்
பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் தேர்வெழுத ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் தேர்வெழுத ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் ஓ.சுந்தரமூர்த்தி கூறியுள்ளதாவது:
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகின்றன. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 7-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 16-ஆம் தேதியும் தொடங்குகின்றன.
மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு கற்றல், கற்பித்தல் பணிகளை செய்து வந்த 10-ஆம் வகுப்பு பாட ஆசிரியர்கள், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாள்களே உள்ள நிலையில், பள்ளி தொடங்குவதற்கு முன்பாக காலை 8 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை பள்ளி வேலை நேரம் முடிந்து 4.20 முதல் 7 மணி வரையும் சிறப்பு வகுப்புகள் எடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு ஆசிரியர்களை 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்குத் தேர்வெழுதும் பணி வழங்கி உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் நலனில் எங்களுக்கு அக்கறை உண்டு. அதேநேரம் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.
பத்தாம் வகுப்பு பாடம் பயிற்றுவிக்காத பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தேர்வுப்பணி வழங்கினால் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அனைத்து பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையே நியமித்தால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இறுதி நேரத்தில் இவ்வாறான தேர்வுப் பணிகளில் ஆசிரியர்கள் தள்ளப்படுவதால், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும். எனவே சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.