முகப்பு
திருப்பூர்

அதிமுக சார்பில் 1500 பேருக்கு நல உதவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி,  அதிமுக சார்பில் சேவூர் கைகாட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 1500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி,  அதிமுக சார்பில் சேவூர் கைகாட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 1500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது. 
அதிமுக அவிநாசி வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஒன்றியச் செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமை வகித்தார். 
செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி,  அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ், தலைமை நிலையப் பேச்சாளர் புதுவை எம்.செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  
இதில் சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் அமைச்சரும்,  மாவட்டச் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்துகொண்டு 1,500 பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார்.  
இந்நிகழ்ச்சியில், அவிநாசி தெற்கு ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம்,  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தியாகராஜன்,   சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், ஏ.ஏ.கருப்பசாமி, நிர்வாகிகள் ப.ராமசாமி,  பி.தங்கவேலு , சின்னக்கன்னு,  எஸ்.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →