திருப்பூர்

பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளி 95% தேர்ச்சி

DIN

பிளஸ் 2 பொதுத் தேர்வில், பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 95.87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.  
இப்பள்ளியில் 242 பேர் தேர்வு எழுதியதில் 232 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வணிகவியல் பாடத்தில் 2பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். 1128 மதிப்பெண்  ஒரு மாணவியும், 1000-க்கு மேல் 24 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.   வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை ஜே.புளோரா கமில் ஜோசப், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 129 பேர் தேர்வு எழுதியதில் 101 பேர் தேர்ச்சி அடைந்தனர்.  தேர்ச்சி விகிதம் 78.27 சதவீதம் ஆகும்.  வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் சி.நாட்ராயன் பாராட்டி வாழ்த்துக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT