வெள்ளக்கோவில் உள்வட்ட பகுதிகளில் மே 29, 30இல் வருவாய்த் தீர்வாயம்
வெள்ளக்கோவில் உள்வட்டப் பகுதிகளுக்கான வருவாய்த் தீர்வாயம் மே 29, 30ஆ ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
வெள்ளக்கோவில் உள்வட்டப் பகுதிகளுக்கான வருவாய்த் தீர்வாயம் மே 29, 30ஆ ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இதில் பட்டா மாறுதல், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றுகள் தேவைப்படுவோர் பங்கேற்றுப் பயன் பெறலாம்.
அரசு பொது சேவை மையங்களில் முன்கூட்டியே விண்ணப்பித்து அதன் ஒப்புகைச் சீட்டுடன் மனுச் செய்ய வேண்டும்.
மே 29 அன்று உள்வட்டத்தைச் சேர்ந்த முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் கிராம மக்களும், மே 30 இல் சேனாபதிபாளையம், வெள்ளக்கோவில், உத்தமபாளையம், லக்கமநாய்க்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியிரச்சல் கிராம மக்களும் பங்கேற்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.