வெள்ளக்கோவில் சந்தைக்கு 10 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு இந்த வாரம் 10 டன் முருங்கைக்காய் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு இந்த வாரம் 10 டன் முருங்கைக்காய் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 12 டன் அளவுக்கு வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்து 10 டன் அளவுக்கு மட்டுமே
முருங்கைக்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால், விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து மர முருங்கைக்காய் கிலோ ரூ. 20க்கும், செடி முருங்கைக்காய் ரூ. 40க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது, திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் முருங்கைக்காய் தேவை அதிகரித்துள்ளதாகவும், வரும் வாரத்தில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.