பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
தாராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தப் பணிக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். புதிய, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட், சந்தைப் பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இதில், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் நஸ்ருதீன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.