மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ராவைப் பற்றி...
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஆட்டோ ரிக்ஷாவில் வந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வாக்களித்தார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவர் என 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்முறைகள் நிகழும் எனக் கணிக்கப்பட்டுள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், தோ்தலில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நிகழாமலிருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தேசிய புலனாய்வு முகமைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி (பவானிபூா்), எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (பவானிபூர்), அமைச்சர்கள் சுஜித் போஸ் (பிதான்நகர்), ஃபிா்ஹத் ஹக்கிம் (கொல்கத்தா கோட்டை), ஜோதி பிரிய மல்லிக் (ஹப்ரா), பாஜகவின் அா்ஜுன் சிங் (நவோபரா), மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாக்ஷி முகா்ஜி (உத்தர்பரா) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே, மேற்கு வங்க மக்கள் வாக்களிக்க தீவிரம் காட்டினர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா, ஆட்டோ ரிக்ஷாவில் வாக்குச்சாவடிக்கு வருகைதந்தார். நாடியா மாவட்டத்தில் உள்ள கரீம்பூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பாஜக ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. மேற்கு வங்க மக்கள் பாஜகவினருக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். முதல் கட்டத்தில், அவர்கள் ஏற்கனவே பதிலடி கொடுத்துவிட்டார்கள். இரண்டாம் கட்டத்திலும் நடக்கும்.
12 ஆண்டுகளாக மத்தியில் மோடி அரசு இருக்கிறது. மேற்கு வங்கம் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜக ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.
மேற்கு வங்க மக்கள் பாஜகவினருக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். முதல் கட்டத்தில், அவர்கள் ஏற்கனவே பதிலடி கொடுத்துவிட்டார்கள். இரண்டாம் கட்டத்திலும் நடக்கும். 12 ஆண்டுகளாக மத்தியில் மோடி அரசு இருக்கிறது. மேற்கு வங்கம் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.
As West Bengal participates in the final phase of assembly elections, TMC MP Mahua Moitra criticised the BJP for undermining democracy, expressing confidence in her party's success.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.