திருப்பூர்

தண்ணீரைப் பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி

DIN


தண்ணீரை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தினர்.
பள்ளி நிர்வாக அலுவலர் அமித்குர்ரே பேரணியைத் தொடக்கிவைத்தார். முதல்வர் ஹெச்.எஸ்.சிதானா தலைமை வகித்தார். இப்பேரணியில் 41 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பல்வேறு கிராமங்கள் வழியே சென்ற இப்பேரணியின் வழித்தடத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன. அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இப்பேரணியில் பங்கேற்றவர்களுக்கு அமர் சைனிக் பள்ளித் தலைமை ஆசிரியர் மீனு சிதானா சான்றிதழ்கள் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT