திருப்பூர்

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

உடுமலையை அடுத்துள்ள சோமவாரபட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் விழா கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதையொட்டி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்பணர்வு முகாம் நடைபெற்றது.
இதையொட்டி முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நடுநிலைப் பள்ளியான இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடிந்து செல்லும் மாணவர்கள் பெற்றோர்களுக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. நிறைவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கி.கோப்பெருந்தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT