திருப்பூர்

குடிநீர்க் கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்

DIN

குடிநீர்க் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் காங்கயம் நகராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
காங்கயம் நகராட்சியில் மாதம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த குடிநீர்க் கட்டணத்தை ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை காங்கயம் நகராட்சியில் மனு அளிக்க உள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் காங்கயம் நகரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி கூறியதாவது:
உயர்த்தப்பட்ட குடிநீர்க் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம். ஒன்றிரண்டு பேர் மனு கொடுத்தால் அது சாதாரண நிகழ்வுதான். காங்கயம் நகராட்சிப் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வந்து தனித் தனியாக மனு கொடுக்க உள்ளோம். ஆகவே, மனு கொடுக்கும் போராட்டம் என அறிவித்துள்ளோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT