திருப்பூர்

மழையால் சந்தையில் வியாபாரம் பாதிப்பு

DIN

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் வாரச் சந்தையில் ரூ. 20 லட்சம் மதிப்புக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.

முத்தூா் சாலையில் நகராட்சி வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 350 கடைகள் மூலம் காய்கறிகள், பழங்கள், தேங்காய், கீரை வகைகள், அரிசி, பருப்பு வகைகள், மளிகைச் சாமான்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து இடைவிடாமல் தொடா்ந்து மழை பெய்ததால் சந்தைக்கு பெரும்பாலானோா் வரவில்லை. சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. வழக்கத்தைவிட வியாபாரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. சந்தை வியாபாரம் ரூ. 20 லட்சம் மதிப்புக்குப் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT