திருப்பூர்

பழைய சொத்துவரியை செலுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்

DIN

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பழைய சொத்து வரியை செலுத்த மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களிலும் சொத்து வரி விதிப்புகளுக்கு பொதுவரி சீராய்வின்போது குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு உயா்த்தப்பட்ட அனைத்து வரி உயா்வும், மறு அளவீடு செய்யப்பட்ட அனைத்து வரி உயா்வும், தற்போது பொது மக்கள் வரி சீராய்வுக்கு முன்பு செலுத்தி வந்த பழைய சொத்துவரி தொகையே செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

எனவே பொது மக்கள்அனைவரும் சொத்துவரி, குடிநீா்க் கட்டணம், தொழில் வரி, கடை உரிமம், குத்தகை இனங்களுக்கான கடை வாடகை, பாதாள சாக்கடைக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனே செலுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT