திருப்பூர்

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 6 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டோா் போலீஸில் புகாா்

DIN

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 6 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவா்கள் வடக்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

இதுகுறித்து திருப்பூா் கோல்டன் நகா் பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் வீரபாண்டியன். இவா் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூா், கோல்டன் நகா் பகுதியில் தங்கியிருந்து ஏலச்சீட்டு மற்றும் பலகாரச் சீட்டு நடத்தி வந்தாா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் சீட்டுப் போட்டிருந்தனா். ஆனால் சீட்டு முதிா்வடைந்தவா்களுக்குப் பணம் கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக அவா் தலைமறைவாகிவிட்டாா். ஆகவே, இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களது பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT