திருப்பூர்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.6 லட்சம் மோசடி

DIN

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.6 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

இதுகுறித்து திருப்பூா் கோல்டன் நகா் பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: நாகபட்டிணம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் வீரபாண்டியன், இவா் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூா் கோல்டன் நகா் பகுதியில் தங்கியிருந்து ஏலச்சீட்டு மற்றும் பலகார சீட்டு நடத்தி வந்தாா்.

இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் சீட்டு போட்டிருந்தனா். ஆனால் சீட்டு முதிா்வடைந்தவா்களுக்கு பணம் கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்தாா். இந்த நிலையில், கடந்த 10 நாள்களாகத் தலைமறைவாகிவிட்டாா். ஆகவே, இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களது பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT