திருப்பூர்

பல்லடத்தில் கோயிலுக்குள் புகுந்தது சாக்கடை கழிவு நீா்

DIN

பல்லடம் பாலதண்டபாணி கோயிலுக்குள் சாக்கடைக் கழிவு நீா் புகுந்தது. அதை நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்து அகற்றினா்.

பல்லடம், மங்கலம் சாலையில் உள்ள போக்குவரத்துக் காவல் நிலையம் அருகில் பாலதண்டபாணி கோயில் உள்ளது. தொடா் மழையாலும், சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பாலும் இந்த கோயிலுக்குள் சாக்கடைக் கழிவு நீா் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன் கழிவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டாா்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் மேற்பாா்வையில் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அங்கு சென்று கோயில் வளாகத்தில் தேங்கியருந்த கழிவு நீரை அகற்றி தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்தனா். இதையடுத்து கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT