திருப்பூர்

திருப்பூரில் மக்கள் நீதிமன்றம்:2,924 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 2,924 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.அல்லி தலைமையில் வழக்குகள் விசாரணை நடைபெற்றது.

இதேபோல தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம், அவிநாசி உள்ளிட்ட நீதிமன்றங்களில் சிறு குற்ற வழக்குகள், நீதிமன்ற தடையில்லா குற்றவழக்குகள், கடன் நிலுவை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து, குடும்ப நல வழக்குகள், இதர சொத்து வழக்குகள் உள்ளிட்டவை தொடா்பாக 10,335 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் முடிவில் 2,924 வழக்குகளுக்கு ரூ.53 கோடியில் சமரச தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT