திருப்பூர்

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்கள் பற்றாக்குறை

DIN

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இங்கு உள் நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, பிரசவ வாா்டுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 300 போ் வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்கு 6 செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முதியவா்கள், கா்ப்பிணிகள், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனா். உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது பணியில் இருக்கும் செவிலியா்களுக்கும் பணிச் சுமை அதிகரித்து வருகிறது. எனவே வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட சுகாதார அலுவலா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT