திருப்பூர்

கேத்தனூரில் இயற்கை  விவசாயத் தோட்டத்தை பார்வையிட்ட உத்தரப் பிரதேச விவசாயிகள்

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் இயற்கை விவசாயம் நடைபெறும் பகுதிகளை உத்தரபிரதேச மாநில விவசாயிகள் பார்வையிட்டனர். 

DIN

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் இயற்கை விவசாயம் நடைபெறும் பகுதிகளை உத்தரபிரதேச மாநில விவசாயிகள் பார்வையிட்டனர். 
பொங்கலூர் ஒன்றியம், கேத்தனூரில் இயற்கை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு பாரம்பரிய விவசாயி பழனிசாமி, தனது தோட்டத்தில் புடலை, வெண்டை, பாகல், கோவை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி பயிர்களை இயற்கை முறையில் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார். 
இந்த தோட்டத்தை உத்தரப் பிரதேச மாநிலம், பாரதீய கிஷான் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். 
மேலும் இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து கேட்டறிந்தனர். 
இதுகுறித்து விவசாயி பழனிசாமி கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக இயற்கை முறையில் எந்த விதமான செயற்கை உரம், பூச்சி மருந்துகளை பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகிறேன். ஜீரோ பட்ஜெட்டில் விவசாயம் மேற்கொள்ள இயற்கை விவசாயத்தை பின்பற்றலாம்.  அதற்காக நாட்டு மாடுகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் இயற்கை உரங்களை பயன்படுத்துவது சிறந்தது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT