முகப்பு
திருப்பூர்

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

அவிநாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 7:51 am IST
பகிர்:

அவிநாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கக் கோரிக்கைக்கு ஏற்ப வழக்குரைஞர்களின் சேம நல நிதியை  உயர்த்தி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். 50 வயதிற்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் 120க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர். 
இதன் காரணமாக  நீதிமன்றங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.