திருப்பூர்

தெக்கலூரில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு

DIN

அவிநாசி அருகே தெக்கலூரில் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி அருகே தெக்கலூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் புறவழிச் சாலை அமைக்கப்பட்டதையடுத்து, இவ்வழியாக வந்து செல்லும் தனியார், அரசுப்  பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் புறவழிச் சாலை மேம்பாலத்தின் மீது சென்று வந்தது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில், மோட்டார் வாகன அலுவலர்கள் உத்தரவின் பேரில், பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று சென்று கொண்டிருந்தன.
தெக்கலூர் செங்காளிபாளையத்தைச் சேர்ந்தவர்  ஆறுமுகம் மனைவி தங்கமணி (35). இவர் தெக்கலூர் செல்வதற்காகத் திங்கள்கிழமை மாலை திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கோவை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி தெக்கலூருக்குப் பயணச்சீட்டு கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர், தங்கமணியை அவமதித்து, தெக்கலூரில் நிற்காது எனக் கூறி கீழே இறக்கிவிட்டுள்ளார். இது குறித்த தகவலை தங்கமணி தனது கணவர், உறவினர்களிடம் செல்லிடப்பேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தெக்கலூர் புறவழிச் சாலை மேம்பாலம் வழியாக  கோவை சென்ற அந்த தனியார் பேருந்தை சிறைபிடித்து, சர்வீஸ் சாலைக்குப் பேருந்தை திருப்பி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இனிவரும் காலங்களில் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திச் செல்வோம் என நடத்துநர், ஓட்டுநர் உறுதியளித்தனர். 
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT