திருப்பூர்

ஜிவிஜி கல்லூரியில் ஓவியக் கண்காட்சி

DIN

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் குப்பையில்லா உலகம் என்கிற தலை ப்பில் ஓவியக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இக்கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை தமிழ்த் துறையும், ஈர நிலம் அமைப்பும் இணைந்து நடத்தியது. கல்லூரி செயலர் கெ.ரவீந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்தார். முதல்வர் எஸ்.கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.
 பேராசிரியர் வே.செடிப்பவுன் வரவேற்றார். ஈர நிலம் அமைப்பின் தலைவர் ஓவியர் ந.தமிழரசன் கண்காட்சியின் நோக்கம் குறித்து பேசினார். மாணவி ம.ஸ்டெனோ கருத்துரை வழங்கினார். இதையொட்டி, குப்பையில்லா உலகம் படைப்போம் என்ற உறுதிமொழியை மாணவிகள் எடுத்துக் கொண்டனர். கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜிவிஜி கல்லூரி,  ஆர்ஜிஎம் மற்றும் ஜிவிஜி விசாலாட்சி பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். செந்தமிழ் மன்றச் செயலர் ம.ராகவி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT