திருப்பூர்

பல்லடம் தொகுதியில் 356 பேருக்கு இரு சக்கர வாகன மானியம்

DIN


பல்லடம் தொகுதியில் 356 பேருக்கு இரண்டு சக்கர வாகன மானியத் தொகைக்கான காசோலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. 
பல்லடம் சட்டப் பேரவை தொகுதியில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் 44 பேருக்கும், பல்லடம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 66 பேருக்கும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 64 பேருக்கும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 47 பேருக்கும், திருப்பூர் மாநகராட்சி 10 வார்டு பகுதியில் 133 பேருக்கும் என மொத்தம் 356 பெண்களுக்கு இரண்டு சக்கர மானிய உதவித் தொகையாக ரூ. 89 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கும் விழா பல்லடத்தில் நடைபெற்றது. 
விழாவுக்கு பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமை வகித்து 356 பெண்களுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பேசினார். விழாவில் மாவட்ட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மார்ட்டின், தாமஸ்ராஜன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பாலமுருகன் (பல்லடம்), மகேஸ்வரன் (பொங்கலூர்), கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT